வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு, 30 வீதத்துக்கு குறையாமல் ஒதுக்குமாறு வலியுறுத்தல்

🕔 July 7, 2015

Gender balance - 01திர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் குழுக்கள், தமது வேட்பு மனுவில், பெண்களுக்கு அதிக சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டுமென, மகளிர் விவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், சுயேற்சைக் குழுக்களும், தமது வேட்பு மனுவில் ஆகக்குறைந்து 30 வீதத்தினையாவது பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டுமென அந்த அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.

மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசியபட்டியல் ஒதுக்கீட்டிலும், மூன்றில் ஒரு பங்கு – பெண்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றில் 5.8 வீதமான பெண்கள்தான் உறுப்பினர்களாக இருந்தனர். தெற்காசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைந்ததொரு தொகையாகும். உலகில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடுகள் என 153 நாடுகளை வரிசைப்படுத்தும்போது, அதில் – இலங்கை 140 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே – நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமன்றி, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சித் தேர்தல்களின்போதும் – பெண்களுக்கு வேட்புமனுவில் ஆகக்குறைந்தது
30 வீதத்தினை ஒதுக்குமாறு மகளிர் விவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்