சாய்ந்தமருதில் வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 சிறுவர்கள் பலி
🕔 January 30, 2017


யூ.கே. காலித்தீன், எம்.வை. அமீர் –
சாய்ந்தமருது பிரதான வீதியில், இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான கல்முனை டிப்போவுக்குரிய பஸ் வண்டியுடன் வேன் ஒன்று – நேருக் நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வேனில் பயணித்த மூன்று சிறுவர்களே சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளனர்.
உம்றா கடமையை நிறைவேற்றிவிட்டு திரும்பிய பாலமுனை – ஹுஸைனியா நகர் பகுதியை சேர்ந்த குடும்பத்தினரை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஏற்றிவந்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
மரணமடைந்த மூன்று சிறுவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03, 04 மற்றும் 09 வயதுடையவர்களாவர்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 09 பேர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேன் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே, விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பஸ்ஸில் பயணித்த எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.
மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

