டெங்கு கட்டுப்படுத்தும் திட்டம்: சாய்ந்தமருது ஹோட்டல் உரிமையாளர்களுக்கான விளக்கமளிக்கும் நிகழ்வு

🕔 January 8, 2017

moh-office-sainthamaruthu-011– யூ.கே. காலித்தீன் –

சாய்ந்தமருது  ஹோட்டல் உரிமையாளர்களுக்கு திண்மக் கழிவகற்றல் தொடர்பாக விளக்கமளிக்கும் வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்றது.

கல்முனை பிராந்தியத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வுக்கு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம். பாரூக் தலைமை தாங்கினார்.

தன்போது, ஹோட்டல் உரிமையாளர்களின் சமகால பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டதோடு, அதனை நிவர்த்தி செய்யும் செயற்திட்டம் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்  முதற் கட்டமாக  அவர்களுக்குள் நிர்வாக கட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்துமாறு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள் ஒன்றிமை முன்வைத்தார்.

இதன்படிஅமைப்பொன்று உருவாக்கப்பட்டதோடு,  நடப்பாண்டுக்கான நிருவாகமும் தெரிவுசெய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களின் ஹோட்டல்களுக்கு, அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்புபிரிவுக்கு பொறுப்பான டொக்டர் என். ஆரிப், பிரதேச சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம். பாறுக், சுகாதார பரிசோகர்களான ஏ.நியாஸ் மற்றும் ஏ.எம். நிஜாமுடின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.moh-office-sainthamaruthu-022

Comments

புதிது பேஸ்புக் பக்கம்