டான் பிரியசாத்துக்கு பிணை;18 நாட்களின் பின்னர் வெளியில் வந்தார்

🕔 December 2, 2016

priyasad-013விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த டான் பிரியசாத் இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் டான் பிரியசாத் இன்று ஆஜர் செய்யப்பட்டபோதே, பிரியசாத்தை பிணையில் விடுவிக்க நீதவான் லங்கா ஜயரட்ன அனுமதி வழங்கினார்.

இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டார் எனும் குற்றச்சாட்டில், டான் பிரியசாத் என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத் எனும் சிங்கள இளைஞர் கடந்த நொவம்பர் மாதம் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இவருக்கு பிணை வழங்கு மாறு பல தடவை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், நீதிமன்றம்  அந்த கோரிக்கைகளை நிராகரித்திருந்தது.

ஆயினும், இன்று இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்