தவ்ஹித் ஜமாத் செயலாளருக்கு விளக்க மறியல்

🕔 November 16, 2016

razik-022வ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்கை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிற மதங்களைப் புண்படுத்தும் படி பேசினார் எனும் குற்றச்சாட்டின் கீழ், தவ்ஹித் அமைப்பின் செயலாளர் ராசிக், இன்று புதன்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

இஸ்லாமிய மதத்தினையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி பேசி வந்த டான் பிரியசாத் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இன்றைய தினம் அப்துல் ராசிக் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments