மக்கள் வயிற்றில் ‘பால்’ வார்த்தார் நிதியமைச்சர் ரவி

🕔 November 4, 2016

Ravi karunanayaka - 0976ற் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை உயர்த்த இடமளிக்கப்படாது என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வற் வரி அதிகரிப்பின் ஊடாக இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையானது, வற் வரி அதிகரிப்பினால் உயர்த்தப்படும் என, பால் மா இறக்குமதியாளர்கள் கூறியுள்ள நிலையிலேயே, நிதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள பால் மாவின் விலை, வற் வரி விதிப்பின் ஊடாக உயர்த்தப்படுவதற்கு இடமளிக்கப்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Comments