விவசாயிகள் செலுத்த வேண்டிய பணத்தொகையை, பொறியியலாளர் மன்சூர் பொறுப்பேற்றுக் கொண்டார்

🕔 October 26, 2016

Mansoor - 0123றக்காமம் பிரதேச விவசாயிகள் 50 வீதம் மானிய அடிப்படையில் பெற்றுக்கொண்ட சோள விதைகளுக்காகச் செலுத்த வேண்டிய பணத்தினை,  இறக்கமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் பொறுப்பேற்றுக் கொண்டமை காரணமாக, குறித்த சோள விதைகளை விவசாயிகள் இலவசமாகப் பெற்றுக் கொண்டனர்.

தேசிய விவசாய வாரத்தினை முன்னிட்டு இறக்காமம் பிரதேச விவசாயிகளின் நன்மை கருதியும், சேனைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் முகமாகவும், அரசாங்கத்தினால் இறக்காமம் பிரதேசத்தில் 100 பயனாளிகளுக்கு சோள விதைகள்வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த சோள விதைக்குரிய 5௦ வீதமான பணத்தினை மானியமாக அரசாங்கம் வழங்கும் அதேவேளை, மிகுதிப் பணத்தினை விவசாயிகள் செலுத்த வேண்டியிருந்தது.

இந்த நிலையில், விவசாயிகளிடமிருந்து அறவிறப்படவுள்ள பணத்தொகையினை, தான் பொறுப்பேற்பதாக கூறிய பொறியியலாளர் மன்சூர், குறித்த சோள விதைகளை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்குமாறு, இறக்காமம் பிரதேச விவசாய பரிசோதகர் எஸ்.ஏ.எம். அஷ்ஹரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கமைவாக விவசாயிகளுக்கு இலவசமாக சோள விதைகள் வழங்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச விவசாய விஸ்தரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இறக்கமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.அஷ்ரப் மற்றும் விவசாய பரிசோதகர் எஸ்.ஏ.எம்.அஷ்ஹர் ஆகியோர் கலந்து கொண்டு விதைகளை வழங்கி வைத்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்