“லசந்தவை கொன்றேன்” என்றவர் கொல்லவேயில்லை; காட்டிக் கொடுத்தது கையடக்கத் தொலைபேசி

🕔 October 22, 2016

 lasantha-09876சிரேஷ்ட  ஊடகவியலாளர் லசந்தவை விக்கிரமதுங்கவை கொலை செய்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு – தற்கொலை செய்து கொண்ட ராணுவ சாஜன், லசந்தவின் கொலை சம்பவம் நடைபெற்ற வேளையில்,  தனது வீட்டிலேயே இருந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கொலை  சம்பவம் இடம்பெற்ற போது குறித்த சாஜன் கேகாலையிலுள்ள அவருடைய வீட்டில் இருந்துள்ளார் என்று, குற்றப்புலனாய்வுத் துறை திணைக்களத்துக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ தினத்தன்று குறித்த சாஜன் பயன்படுத்திய தொலைபேசியை வைத்தே, இவ் விடயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறித்த சாஜனுடைய வீட்டுப் பிரதேசம் அமைந்துள்ள இடங்களிலேயே அவருடைய தொலைபேசி செயற்பட்டுள்ளதாகவும், அதற்கு அழைப்புக்கள் வந்துள்ளதாகவும் ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்