தொப்பி அளவானதால் போட்டுக் கொண்டுள்ளனர்; தில்ருக்ஷி விலகல் குறித்து, டிலான் பெரேரா கருத்து

🕔 October 18, 2016

Dilan - 098“நிதிக் ­குற்றப் புல­னாய்வுப் பிரிவின் எந்த அதி­கா­ரி­யையோ அல்­லது லஞ்ச ஊழல் ஆணைக்­குழுவின் நபர்­க­ளையோ, சுயா­தீன அமைப்­புக்­களிலுள்ள நபர்கள் எவரையுமோ தனிப்பட்ட முறையில் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி உரையாற்றவில்லை. ஜனாதிபதியின் உரையினால் மன­ச்சாட்சி உறுத்தும் நபர்கள் பத­வி­வி­ல­கு­கின்­றனர் என்று கருதமுடியும். ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­ய­மைக்கு அமைய தொப்பி சரி­யாக இருப்பின் உரிய நபர்கள் போட்­டுக்­கொள்­ளலாம்” என ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ளரும் ரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று திங்கட்கிழமை கட்சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்றது. இதன் போது, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்­பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்­ர­ம­சிங்க பதவி வில­கி­யமை தொடர்பில் கேள்வி எழுப்­பப்­பட்ட போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்;

“ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கருத்தில் எந்­த­வொரு தனிப்­பட்ட நப­ரையும் ஊழல்வாதிகள் என்றோ அல்­லது அர­சியல் தலை­யீ­டு­க­ளுடன் செயற்­ப­டு­கின்­றனர் என்றோ சுட்­டிக்­காட்­ட­வில்லை. நிதிக்­குற்றப் புல­னாய்வு பிரிவு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு என்­பன சுயா­தீ­ன­மாக செயற்­பட அனும­திக்க வேண்டும் என்­ப­தையே சுட்­டிக்­காட்­டினார். அதை தவ­றான கோணத்தில் சித்­த­ரிக்க எவரும் முற்­ப­டக்­கூ­டாது. அதேபோல் லஞ்ச ஊழல் ஆணைக்­குவின் பணிப்பாளர் தில்ருக் ஷி டயஸ் விக்­ர­ம­சிங்க பதவி வில­கி­யமை தொடர்பில், எந்தக் கருத்­துக்­க­ளையும் என்னால் தெரி­விக்க முடி­யாது. ஏன் பதவி வில­கினார் என்­பதை அவ­ரி­டமே வினவ வேண்டும்.

மேலும் நிதிக் ­குற்றப் புல­னாய்வுப் பிரிவின் எந்த அதி­கா­ரி­யையோ அல்­லது லஞ்ச ஊழல் ஆணைக்­குழுவின் நபர்­க­ளையோ, சுயா­தீன அமைப்­புக்­களிலுள்ள நபர்கள் எவரையுமோ தனிப்பட்ட முறையில் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி உரையாற்றவில்லை. அவ்­வாறு இருக்­கையில் மன­ச்சாட்சி உறுத்தும் நபர்கள் பதவி வில­கு­கின்­றனர் என்றுகூட கருத முடியும்.

அவ்­வா­றான நிகழ்­வா­கக்­கூட, லஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழுவின் பணிப்பாளர் பதவி விலகியமை இருக்க முடியும் அல்லவா? ஜனாதிபதி தெரிவித்தமைக்கு அமைய தமக்குத்தான் இந்த கருத்துக்கள் பொருந்தும் என நினைக்கும் நபர்கள், தொப்பி சரியாயின் போட்டுக்கொள்ளலாம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்