பசிலுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்ட காணியை, ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 October 14, 2016

basil-965முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடையது என கூறப்பட்ட மல்வானை பகுதியிலுள்ள காணி மற்றும் அதில் அமைக்கப்பட்டுள்ள வீடு ஆகியவற்றினை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யுமாறு பூகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூகொட நீதவான் ருவன் பத்திரன இன்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவினை விடுத்துள்ளார்.

இதேவேளை குறித்த  ஏலத்தில் கிடைக்கப்பெறும் பணத்தை அரச கணக்கில் வைப்பில் இடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த நீதிமன்ற விசாரணையின் போது, மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணியும், அதில் அமைக்கப்பட்டுள்ள வீடும் தனக்குச் சொந்தமானது அல்ல என்று, பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதற்கமையவே, அந்தக் காணியை விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்