ஜனாதிபதி மைத்திரியின் கருத்துக்கு, இன்ரநஷனல் ட்ரான்ஸ் பேரன்சி கண்டனம்

🕔 October 13, 2016

maithiri-0987ஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் ‘இன்ரநஷனல் ட்ரான்ஸ் பேரன்சி’யின் தலைவர் சட்டத்தரணி லக்ஸான் டயஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி தலையீடு செய்யக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தவறாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் தெரிவித்திருந்ததோடு; குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு என்பன, சில அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் கீழ் இயங்குகின்றன என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் மேற்படி கூற்றுத் தொடர்பிலேயே, ‘இன்ரநஷனல் ட்ரான்ஸ் பேரன்சி’யின் தலைவர் லக்ஸான் டயஸ் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

சட்டத்தரணி லக்ஸான் டயஸ் மேலும் கூறுகையில்;

“அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ், ஆணைக்குழுக்கள் உருவாக்கபட்டுள்ளன. அவை சுதந்திரமானவை.

எனவே, லஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்தினை மீளப் பெற்றுக்கொள்தல் வேண்டும்.

அதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களையும் நியாயப்படுத்த முடியாது” என்றார்.

தொடர்பான செய்தி: லஞ்ச ஊழல் ஆணைக்குழு, அரசியல் ரீதியாக இயங்கினால் நடவடிக்கை எடுப்பேன்: ஜனாதிபதி சீற்றம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்