ஊவா விஞ்ஞான கல்லூரியில் தீ விபத்து; கல்விசாரா ஊழியர் பலி

🕔 September 19, 2016

fire-broke-out-01வா விஞ்ஞான கல்லூரியில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 33 வயதுடைய கல்விசாரா ஊழியரொருவர் உயிரிழந்துள்ளார்.

ஹாலி எல – பதுளையில் அமைந்துள்ள மேற்படி கல்லூரியின் களஞ்சியசாலையில் இன்று காலை இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.

மேற்படி விபத்து நிகழ்ந்த போது, பாதிக்கப்பட்ட நபர் இரும்பு ஒட்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தீயணைப்புப் படையினரும், பொலிஸாரும் இணைந்து இணைந்து தீயை அணைத்தனர். ஆயினும், குறித்த களஞ்சிய அறை முற்றாக நாசமடைந்துள்ளது.

தீ விபத்தில் காயமடைந்த நபர், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரழந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்