நிவ்யோக் சென்றடைந்தார் ஜனாதிபதி; ஐ.நா. கூட்டத் தொடரில், நாளை மறுதினம் உரையாற்றுகிறார்

🕔 September 19, 2016

president-maithiri-013னாதிபதி மைத்திரிபால சிறிசேன,  அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரைச் சென்றடைந்துள்ளார்.

ஐ.நா. வின் 71 ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரி, நேற்றைய தினம் இலங்கையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டார்.

ஐ.நா.வின் பொதுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை மறு தினம் புதன்கிழமை இக் கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ளார்.

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரி உரையாற்றும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இங்கு, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் உரை நிகழ்த்தவுள்ளார். அவரின் பதவிக் காலத்தில் ஐ.நா. பொதுச் சபையில் ஆற்றும் இறுதி உரையாக, இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தின் போது, பல்வேறு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் மற்றும் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி உள்ளிட்டவர்களை ஜனாதிபதி மைத்திரி சந்திக்கவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்