ஜனாதிபதி தரையிறங்கியபோது, படம் பிடித்தவர் கைது

🕔 September 17, 2016

helicopter-0971னாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹெலிகொப்டரில் தரையிறங்கியபோது, படம் பிடித்த நபரொருவரை நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையக மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசிசேன பயணித்த ஹெலிகொப்டர் தரையிறங்கிய போது, அதனை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் பிடித்தார் எனும் குற்றச்சாட்டில் 26 வயதுடைய நபரொருவரை பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர் தலவாக்கலையைச் சேர்ந்த லொறி சாரதி எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் தனது லொறியை ஹவ்லொக் வீதியில் தரிக்கச் செய்திருந்த சமயம் இவ்வாறு படம் பிடித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்