சமஸ்டி முறைமை நாட்டைத் துண்டாடி விடும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

🕔 September 17, 2016

dinesh-gunawardana-097மஸ்டி முறை அதிகார பரவலாக்கத்தின் கீழ்,தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதை ஒன்றிணைந்த எதிரணியினர் முழுமையாக எதிர்ப்பதாக ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்த்தன நேற்று தெரிவித்துள்ளார்.

சமஸ்டி முறைமையின் ஊடாகவே, இலங்கையில் அரசியல் தீர்வு காண முடியும் என்று நேற்றைய தினம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்திருந்தார். மேலும், இம்முறைமை பல்வேறு நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

சந்திரிக்காவின் இந்தக் கருத்து தொடர்பிலேயே, தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, சமஷ்டி முறையை நாட்டை சிதைவுபடுத்தி, துண்டாடி விடும் என்றும் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

எனவே, ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கே ஒன்றிணைந்த எதிரணியினர் ஆதரவளிப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments