மலேசிய பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்துக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஜயம்

🕔 September 8, 2016
hisbullah-011
லேசியா பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்துக்கு  மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் தலைவரும், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று புதன்கிழமை விஜயம் செய்தார்.
பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பம், கட்டிடம் மற்றும் நவீன கல்விக் கூட வசதிகளை பார்வையிட்ட ராஜாங்க அமைச்சர், இவ்வசதிகளை ரிதிதென்னை பிரதேசத்தில் அமைக்க்ப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கும் பெறுவதற்கான ஆலோசனைகளை இந்த விஜயயத்தில் பெற்றுக் கொண்டார்.
இதன்போது, பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகள், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று அதிகாரி பொறியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பல்கலைக்கழக அதிகாரிகளும் சமூகமளித்தருந்தனர்.hisbullah-022

Comments