நஸ்ரினுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியல்

🕔 September 7, 2016

Courts order - 01காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டு, மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பண்டாரகம வர்த்தகரை, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். சுவர்ணராஜா இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

நஸ்ரின் எனும் 35 வயதான மேற்படி நபர், திருகோணமலையிலுள்ள வங்கியொன்றில், தங்க நகைகளை ஏலத்தில் எடுப்பதற்காகச் சென்றிருந்த வேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போனார் எனத் தெரிவித்து, அவரின் தந்தை பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

எவ்வாறாயினும், குறித்த நபர் பலாங்கொட பகுதியில் மறைந்திருந்தபோது, இன்று புதன்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.

இவரை, நீதிமன்றில் இன்று ஆஜர் செய்தபோது, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Comments