சகீப் கொலை தொடர்பில் கைதானவர்களை, தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

🕔 September 2, 2016

Sakeem - 0225ம்பலப்பிட்டி வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் – கடத்திக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் – கைது செய்யப்பட்ட 07 பேரையும், தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு, நீதவான் நிஷாந்த பீரிஸ் அனுமதியளித்துள்ளார்.

29 வயதான வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான், அவரின் வீட்டுக்கு முன்னால் வைத்துக் கடத்தப்பட்ட நிலையில், இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

Comments