தென்னமரவாடி களப்புப் பகுதியில் ரி 56 துப்பாக்கி மீட்பு

🕔 September 2, 2016

T 56 Gun - 012– எப். முபாரக் –

திருகோணமலை – தென்னமரவாடி களப்புப் பகுதியில் நான்காவது தடவையாக நேற்று வியாழக்கிழமை இரவு  ரி 56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னமரவாடி களப்பு பகுதியில் துப்பாக்கியொன்று காணப்படுவதாக, பொலிஸ் அவசர அழைப்பிற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கி தொடர்பான அறிக்கையினை நீதிமன்றிற்கு சமர்பிக்கவுள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்