விமல் வீரவன்சவின் சகோதரரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

🕔 September 1, 2016

Sarath weeravansa - 075தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் சகோதர் சரத் வீரவன்சவை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான்  நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரச வாகனங்களை துஷ்பியோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில்,  நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை, சரத் கைதுசெய்யப்பட்டார்.

நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சரத் வீரவன்சவை, எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.

நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் கைது செய்யப்பட்டார்.

Comments