கோட்டாவுக்கு எதிராக, லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு

🕔 August 31, 2016

Gottabaya rajapaksa - 866பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, கொழும்பு பிரதான நீதிமன்றில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு – வழக்கு ஒன்றை இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் கோட்டாவின் பெயருடன் மேலும் 07 பேரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன.

‘மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தினை, கப்பலில் வைத்துச் செயற்படும் பொருட்டு, அவன் கார்ட் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ‘அவன்ட் கார்ட்’ நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதியின் பெயரும், எதிராளி தரப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் நிறுவனத்துக்கு 11.4 பில்லியன் ரூபா லாபம் ஈட்டித்தந்துள்ளார்கள் என்றும், இதனால் அரசாங்கத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக, லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் – வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்