ஜனாதிபதியின் இணையத்தை ஊருவிய மாணவனை, நன்னடத்தை இல்லத்துக்கு அனுப்புமாறு உத்தரவு

🕔 August 30, 2016

Judgement - 01னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய (Hacking) குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 17 வயதுடைய மாணவனை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நன்னடத்தை இல்லத்தில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.

இதேவேளை, மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபரை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை, விளக்க மறியலில் வைக்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின்  உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய (Hacking) குற்றச்சாட்டில், 17 வயதுடைய மாணவர், நேற்று கடுகன்னாவையில் வைத்து கைது செய்யப்பட்டார். இதேகுற்றச்சாட்டில் மற்றொரு நபர் இன்றைய தினம் மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து கைது கைதானார்.

ஜனாதிபதியின்  உத்தியோகபூர்வ இணையத்தளம், கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஊடுவப்பட்டிருந்தது.

முதலாவது தடவை, இலங்கையைச் சேர்ந்த குழுவொன்றினால் ஊடுருவப்பட்டதோடு, சிங்கள மொழியில் ஒரு தகவலும், ஜனாதிபதியின் இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாவது முறை இடம்பெற்ற ஊடுருவல், பங்களாதேசத்தைச் சேர்ந்த குழுவினரால் நிகழ்தப்பட்டதாக உரிமைகோரப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்