ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய மற்றுமொரு நபர் மொரட்டுவயில் கைது

🕔 August 30, 2016

Hacking - 0987னாதிபதி மைத்திபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய (Hacking) குற்றச்சாட்டில் மற்றுமொரு நபர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இருபத்தாறு வயதுடைய மேற்படி நபர், மொரட்டுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக, பொலிஸார் மேலும் கூறினர்.

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய குற்றச்சாட்டில், நேற்றைய தினம் 17 வயதுடைய மாணவரொருவர், கடுகன்னாவ பிரதேசத்தில் வைத்து கைதானார்.

ஜனாதிபதியின்  உத்தியோகபூர்வ இணையத்தளம், கடந்த 25 ஆம் திகதி வியாழக்கிழமையும், மறுநாள் வெள்ளிக்கிழமையும் ஊடுருவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்