புற்று நோயாளர்களுக்கான அனைத்து மருந்துகளும் இலவசம்: அமைச்சர் ராஜித அறிவிப்பு

🕔 August 22, 2016

Rajitha - 344புற்று நோயாளர்களுக்கான அனைத்து மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரித்துள்ளார்.

இதேவேளை, புற்றுநோயாளர்களுக்கு வைத்தியசாலைகளால் வழங்கப்படும் – அனைத்து மருந்து விலைச் சிட்டைகளுக்கும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை மிகவும் அதிகமாகும். இந்த மருந்துப் பொருட்களை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து மருந்துகளையும் இலவசமாக வழங்கி சிகிச்சை வழங்கும் செயற்பாடு, இலவச சுகாதார சேவைக்குள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

இருதய நோயாளர்களுக்கான ‘ஸ்ரென்சை’ இலவசமாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த வருடம் 1200 மில்லியன் ரூபாவை செலவிட அமைச்சுத் திட்டமிட்டுள்ளது.

கண் வில்லைகளை இலவசமாக வழங்குதல், இரத்த பரிசோதனைகளை அரசாங்க வைத்தியசாலைகள் மூலம் இலவசமாக மேற்கொள்ளுதல் போன்ற சேவைகளும் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Comments