ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேருக்கு மரண தண்டனை

🕔 August 5, 2016

Judgement - 01– க. கிஷாந்தன் –

ரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு நுவரெலியா உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்ட மேற்படி நபர்களுக்கு,  மரண தண்டனை விதித்து – நீதிபதி லலித் ஏக்கநாயக்க தீர்பளித்தார்.

2004ஆம்ஆ ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம்  திகதி இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது.

நுவரெலியா – ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபளை கொங்கோடியா தோட்டத்தை சேர்ந்த பெரியசாமி அறிராம் என்பவருக்கும், தண்டனை விதிக்கப்பட்ட எழுவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டிருந்தது.

இதனால், பெரியசாமி அறிராம் எனும் மேற்படி நபரை, குற்றவாளிகள் கத்தியால் தாக்கி கொலை செய்ததாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி இன்று சாட்சியமளித்தார்.

பழனியாண்டி முத்துராஜா, பழனியாண்டி அறிராம், பழனியாண்டி நீலமேகன், பழனியாண்டி சுப்பிரமணியம், நீலமேகன் கமலநாதன், நீலமேகன் பாலசந்திரன்,  சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் ஆகியோர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டமையை அடுத்து, அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்