உபகரண விநியோகத்தில் குச்சவெளி பிரதேச செயலகம் பாரபட்சம்; நடவடிக்கை எடுக்கிறார் இம்ரான் எம்.பி

மேற்படி அமைச்சினால் வழங்கப்பட்ட தொழில்சார் உபகரணங்கள், தனியொரு கட்சி சார்பானவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பொதுமக்கள் தனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.
அரசினால் வழங்கப்படும் உதவிகள் எவ்விதப் பாகுபாடுமின்றி பொருத்தமான சகலருக்கும் வழங்கப்பட வேண்டும். இதுதான் நியாயம். இப்போது முன்னெடுக்கப்படும் நல்லாட்சியில் இது போன்ற பாகுபாடுகளை அனுமதிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த உபகரணங்கள் வழங்கப்பட்ட பயனாளிகளைத் தெரிவு செய்தவர் யார்? எந்த அடிப்படையில் தெரிவுகள் இடம்பெற்றன? என்ற விபரங்களோடு, பயனாளிகள் பட்டியல் உள்ளிட்ட அறிக்கையினை விரைவில் சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளரை – நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் வலியுறுத்தியுள்ளார்.