நரிகள் மன்னர்களான காலம் முடிந்து விட்டது; மாவனல்லை எங்கும் சுவரொட்டிகள்

🕔 July 28, 2016

Poster - 098‘நரிகள் மன்னர்களான காலம் முடிந்து விட்டது’ எனத் தொடங்கும் வாசகங்களுடனான சுவரொட்டிகள் மாவனல்லை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சினர் இன்றைய தினம், பேராதெனியவில் ஆரம்பித்த பாத யாத்திரைக்கு எதிராகவே, இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

‘நரிகள் மன்னர்கள் ஆன காலம் முடிந்து விட்டது. முழு நாட்டையும் அருவருக்கச் செய்த ராஜபக்ஷவினர் – இன்றும் வேண்டாம், நாளையும் வேண்டாம், எப்போதும் வேண்டாம்’ என அந்த சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளது.

தமது பாத யாத்திரை மீது கொண்டுள்ள அச்சம் காரணமாகவே, கூட்டு அரசாங்கம் இந்த சுவரொட்டியை ஒட்டியுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்