பாத யாத்திரையில் கலந்து கொண்ட மஹிந்த, ஜீப் வண்டியில் பயணித்த கொடுமை

🕔 July 28, 2016

Mahinda - 01
ன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த யாத்திரையில் கலந்து கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ – ஜீப் வண்டியில் பயணித்த படமொன்று வெளியாகியுள்ளது.

மேற்படி – பாத யாத்திரையானது, இன்று வியாழக்கிழமை பேராதெனிய சந்தியிலிருந்து ஆரம்பமானது.

அரசாங்கத்துக்கு எதிர்பை தெரிவிக்கும் வகையில், இந்தப் பாத யாத்திரை நடத்தப்படுகிறது.

இதில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பாத யாத்திரை என்றாலே, நடந்து பயணிப்பது என்று அர்த்தமாகும்.

ஆனால், இதில் கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷ – ஜீப் வண்டியில் பயணிப்பது, அவரின் ஆதரவாளர்களை ஏமாற்றுவதாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்