நாமலுக்கு வீட்டுச் சோறு; சிறைச்சாலைத் தரப்பு அனுமதி

🕔 July 13, 2016

Namal - 0133விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்விஷவுக்கு வீட்டிலிருந்து உணவுகளை கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, வெலிக்டை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவுகளுக்கு பதிலாக வீட்டிலிருந்து உணவுகளைத் தருவித்து உட்கொள்ள அனுமதியளிக்குமாறு நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை ஆணையாளரிடம் நேற்று செவ்வாய்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிணங்க, நாமல் ராஜபக்விஷவின் கோரிக்கையை சிறைச்சாலை ஆணையாளர் ஏற்றுக்கொண்டார்.

இதன்படி நேற்று முதல் வீட்டிலிருந்து உணவு தருவித்து உட்கொள்ள நாமலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்