கோட்டாவின் ராணுவப் பாதுகாப்பு குறைப்பு

🕔 July 12, 2016

Gottabaya rajapaksa - 866பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பு இன்று செவ்வாய்கிழமை நீக்கப்பட்டுள்ளது.

இதனை கோட்டாவும் உறுதி செய்துள்ளார்.

தனக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பை நீக்கி விட்டு, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை பாதுகாப்புக்கு நியமித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த 50 ராணுவ வீரர்களில் 25 பேரை விலக்கிக் கொண்டு, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் 25 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்