சஊதி அரேபியா; மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகில், தற்கொலை தாக்குதல்

🕔 July 4, 2016

Suicide att- Madina - 88
ஊதி அரேபியாவின் மதீனா நகரிலுள்ள மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள பாதுகாப்புத் தலைமையகத்திற்கு பக்கத்தில், இன்று திங்கட்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் பலியாகியிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன.

மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலிலேயே, முஹம்மது நபியின் அடக்கஸ்தலம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு பகுதி நகரான கத்திஃப் நகரிலுள்ள ஷியாக்களின் பள்ளிவாசலுக்கு அருகே தற்கொலை குண்டுத் தாக்குதலொன்று இடம்பெற்றதை அடுத்து, இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இன்று திங்கட்கிழமை முன்னதாக, ஜித்தா நகரிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகே நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில், இரண்டு பாதுகாப்பு காவலர்கள் காயமடைந்தனர். தற்கொலை குண்டுதாரி பலியானார்.

அந்தத் தாக்குதல் அமெரிக்க சுதந்திர தினத்தின் அதிகாலை நேரத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்