நவலோக வைத்தியசாலையில் மஹிந்த; ரோஹிதவை நலன் விசாரிக்கச் சென்றார்

🕔 June 25, 2016

Mahinda - 064நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் நலம் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை காலை நவலோக வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரின் தடையை மீறி செல்ல முற்பட்ட ரோஹித அபேகுணவர்தன இரும்புத் தடையில் சிக்கி காயமடைந்தார்.

இந்தநிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிதவை பார்வையிடுவதற்காக மஹிந்த ராஜபக்வைஷ, வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்