முஸம்மிலுக்கு ஜுலை 04 வரை விளக்க மறியல்

🕔 June 20, 2016

Musammil - 098தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை ஜுலை 04ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.

கடந்த ஆட்சிக் காலத்தின்போது ஜனாதிபதி செயலக வாகனங்களை, முகம்மட் முஸம்மில் துஷ்பிரயோகம் செய்ததாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில், அவரை இன்று திங்கட்கிழமை காலை பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து, முகம்மட் முஸம்மில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோதே, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்