ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோட்டாவை மக்கள் கோருகின்றனராம்; அவரே கூறுகிறார்

🕔 June 13, 2016

Gottabaya - 0987டுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, தன்னிடம் பலர் கோரிக்கை விடுத்து வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் ஜனாதிபதியாக வந்தால், தற்போதைய சிக்கலை சரியான வழிக்கு கொண்டு வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் என்னை போட்டியிடுமாறு இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் வாழும் மக்கள் கோருகின்றனர்.

நாடு தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளது. நான் ஜனாதிபதியாக வந்தால், தற்போதைய சிக்கலை சரியான வழிக்கு கொண்டு வருவேன்.

நாங்கள் தற்போது பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் பின்நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. மக்கள் என்னை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கோரியிருந்தாலும் நான் இன்னும் தீர்மானிக்கவில்லை.

எனினும் அது சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொறுத்தது. ஆனால், என்னிடம் தற்போது அப்படியான திட்டங்கள் எவையுமில்லை. நான் அரசியல்வாதி அல்ல. நாட்டுக்கு தற்போது சரியான தலைமைத்துவம் இல்லை என மக்கள் கருதுகின்றனர்.

அது அவர்களின் நம்பிக்கை. இது என்னுடைய கருத்து அல்ல. மக்களுக்கு தலைமை வழங்க தற்போது எவரும் இல்லை. நாட்டுக்கு என்ன நடக்கிறது என்பது தமக்கு தெரியவில்லை என மக்கள் கூறுகின்றனர்.

சில ஜனாதிபதிகள் தற்போது யாழ்ப்பாணத்திற்கு சென்று மக்கள் கூட்டங்களில் உரையாற்றுகின்றனர். நாங்களே அதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுத்தோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்