இனரீதியான பாரபட்சம் நீடிக்கிறதா; சந்தேகம் எழுவதாக சபையில் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 June 11, 2016

Hakeem - 75432ன ரீதி­யான பார­பட்சம் நீடிக்­கின்­றதா என்ற சந்­தேகம் எழுந்­தி­­ருக்­கி­றது என்று ஸ்ரீலங்­கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இவ்­வா­றான நிலை­மைகள் தொடர்ந்தால் இன நல்­லி­ணக்கம் எவ்­வாறு ஏற்­படும் எனவும் அவர் கேள்வி எழுப்­பினார்.

சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஹக்கீம் ­கண்­ட­வாறு கூறினார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

தற்­போ­தைய நிலையில் பிர­யோக ரீதி­யாக பொது மக்­க­ளி­டத்தில் எவ்­வ­ளவு காணிகள் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன என்­பது தொடர்­பாக சீர்­தூக்­கிப்­பார்க்க வேண்­டி­யுள்­ளது. அதே­போன்று வடக்கு கிழக்கில் காணப்­படும் ரா­ணுவ பிரச்­சினை குறித்தும் சீர்­தூக்கி பார்க்க வேண்­டி­யுள்­ளது.

முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் வடக்கு – கிழக்கில் அவர்­க­ளுக்குச் சொந்தமான காணிகள் தற்­போதும் பெரு­ம­ளவில் விடு­விக்­கப்­ப­டா­தி­ருக்­கின்­றன.

குறிப்­பாக சில இடங்­களை கூற­வேண்­டி­யுள்­ளது. மன்னார் மாவட்­டத்தின் சிலாவத்துறையில் முஸ்­லிம்கள் பூர்­வீ­க­மாக பரம்­ப­ரை­யாக வாழ்ந்து வந்­தனர். அவர்கள் அங்­கி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்த தரு­ணத்தில் அங்கு பாரிய கடற்­படை முகாம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த முகாமை அகற்றி பொது மக்­க­ளி­டத்தில் கைய­ளிக்க வேண்டும் என்­பது குறித்து பிர­த­ம­ரி­டத்­திலும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளோம். அந்த முகாம் அகற்­றப்­பட்டு பொது மக்­க­ளி­டத்தில் கைய­ளிக்­கப்­பட வேண்டும்.

இதே­போன்று கிழக்கு மாகா­ணத்தில் புல்­மோட்டை, மண்­கிண்டி, அரி­சி­மலை பகுதிகளில் பொது மக்­களின் விசே­ட­மாக முஸ்லிம் மக்­களின் காணி­களை ராணுவத்தினர் கைய­கப்­ப­டுத்தி முகாம்­களை அமைத்து வைத்துக் கொண்­டுள்­ளனர்.

பொத்­துவில் பகு­தியில் கடற்­ப­டை­யி­னரும் திரு­கோ­ண­மலை வெண்­மணல் பகு­தியில் விமானப் படை­யி­னரும் காணி­களை சுவீ­க­ரித்து ஹோட்­டல்­களை அமைத்­துள்­ளனர். திருக்­கோவில் பிர­தே­சத்தில் உள்ள ஐந்து விவ­சாய அமைப்­புக்கள் பல்­வேறு பிரச்சினை­க­ளுக்கு மு­கம்­கொ­டுத்­து வரு­கின்­றனர்.

அதே நேரம் ஹிங்­கு­ரான பகு­தியில் கரும்புச் செய்­கை­யா­ளர்கள் பல்­வேறு பிரச்சினைகளை எதிர்­கொள்­கின்­றனர். இது சம்­பந்­த­மாக அம்­பாறை மாவட்ட செயலாளர் தலை­மையில் கலந்­து­ரை­யாடி குழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. தற்போதும் கூட சில பகு­தி­களில் நிர்­வாக எல்­லையைப் பயன்­ப­டுத்தி அங்கு வேறு இனத்­த­வர்கள் தாம் பூர்­வீ­க­மாக மேற்­கொண்ட விவ­சாய நட­வ­டிக்­கை­களில் ஈடு­படுவதற்கு இட­ம­ளிக்­காது காணப்­படும் நிலை­மைகள் உள்­ளன.

இவ்­வா­றான நிலையில் எவ்­வாறு இனங்­க­ளுக்கு இடையில் நல்­லி­ணக்கம் ஏற்­படும்.
அதி­காரப் பகிர்வு தொடர்­பாக பேசப்­ப­டு­கின்­றது. நாடாளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களில் காணிகள் தொடர்­பான பரிந்­துரை செய்யப்பட்டுள்­ளது. எவ்­வா­றா­யினும் காணி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­ப­டாது காணி பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வுகாண முடி­யாது.

தற்­போது வரையில் காணி ஆணைக்­கு­ழுவை உரு­வாக்­கு­வது தொடர்­பான நடவடிக்கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட மத்திய அர­சாங்­கத்தின் தலை­யீடு நீக்­கப்­பட வேண்டும் என்­பதை இச்­ச­பையில் வலியுறுத்த விரும்­பு­கின்றேன். அதே­நேரம் தற்­போது ஆட்­சி­யு­ரிமை சட்­டத்தில் திருத்தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அதன் பிர­காரம் விசேட நீதி­மன்­றங்­களின் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு காணிகள் உரி­ய­வர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட வேண்டும்.

செப்­டெம்பர் மாதத்­திலும் எதிர்­வரும் மார்ச் மாதத்­திலும் ஜெனிவா கூட்டத் தொடர்களுக்கு முகங்­கொ­டுக்கப் போகின்றோம். இந்த விட­யங்­களில் முன்னேற்றங்களை காணாது அடுத்த கட்டம் குறித்து எவ்­வாறு கவனம் செலுத்­து­வது என்­பதை சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

இதே­வேளைஇ நிர்­வாக சேவையில் இன ரீதியில் பார­பட்சம் காட்­டப்­ப­டு­கின்­றதா? என்ற சந்­தேகம் தொடர்பில் தீவி­ர­மாக ஆராய வேண்­டி­யுள்­ளது. குறிப்­பாக வனவிலங்கு இலாகா, வனவிலங்கு திணைக்களம் ஆகியவை பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்ற போது அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கடமையுள்ளது.

எனினும் அங்கு இன ரீதியான பாகுபாட்டுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. நிர்வாக சேவையில் காணப்படும் அதிகாரிகளை நேரடியாக இவ்விடயத்தில் குற்றஞ்சாட்டுவது நோக்கமல்ல. ஆனாலும் இவ்வாறான பாகுபாடு இன்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்