தாஜுதின் கொலை; அனுர சேனநாயக்கவுக்கு தொடந்தும் விளக்க மறியல்

🕔 June 9, 2016

Anura Senanayake - 013க்பி வீரர் வசிம் தாஜுதின் கொலை தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, ரக்பி வீரர் வசிம் தாஜூடினின் கொலை சம்பவம் தொடர்பிலான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, நாரஹேன்பிட்டி போக்குவரத்து பிரிவின் முன்னாள் நிலைய பொறுப்பதிகாரி சுமத் குமாரவிற்கு கருத்து தெரிவிக்க – நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

மேலும், விருப்பத்தின் பிரகாரம் முன்வந்தால் நாளையும் கருத்துத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியுமென கொழும்பு மேலதிக நீதவான் சந்தேநபருக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்