அமைச்சுப் பதவியிலிருந்து ஹிஸ்புல்லா ராஜிநாமா; கடிதத்தைக் கொடுத்து விட்டு, வெளிநாடு பறந்தார்

🕔 May 31, 2016

Hisbullah - 098புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியிடம் தனது ராஜிநாமாக் கடிதத்தினைச் சமர்ப்பித்த ஹிஸ்புல்லா, தற்போது  வெளிநாடு சென்றுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

தனக்கான பொறுப்புகள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படாமை மற்றும் அமைச்சு செயல்பாடுகள் குறித்து அதிருப்தியடைந்த நிலையில், அவர் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது.

ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து மேலும் பல ராஜாங்க அமைச்சர்கள், தமது ராஜினாமாக் கடிதங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

எதிர்வரும் ஜுன் மாதம் ஏழாம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ராஜாங்க அமைச்சர்களுக்கான பொறுப்புகள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறில்லாத பட்சத்தில் மேலும் பல ராஜாங்க அமைச்சர்களும், தங்கள் பொறுப்புகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும் வகையில், பதவிகளை ராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்