மரணத்தின் கூக்குரல்
– மப்றூக் – மரண தண்டனை குறித்த வாதப் பிரதிவாதங்கள் உயர்ந்த குரலில் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கையில், சட்டரீதியாக மரண தண்டனை அமுலில் உள்ள போதும், கடந்த 40 வருடங்களாக நிறைவேற்றப்படவில்லை. ஆயினும், மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ‘அலுகோசு’ பதவிகளுக்கான ஆட்சேர்ப்பும் நாட்டில் நடந்து