தலைப்புச் செய்திகள்

தென்கொரியாவில் நடந்த விபத்தில், இலங்கையர் இருவர் மரணம்: வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

தென் கொரியாவி்ல் நடந்த வீதி விபத்தில் இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஹ்வாசியோங்-சி (Hwaseong-si) பகுதியில் நேற்று முன்தினம் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் கொடகவெல – ரன்வலவைச் சேர்ந்த 39 வயதுடைய அனில் குமார விஜயரத்ன மற்றும் வலபானை, ஹல்கிரனோயாவைச் சேர்ந்த 31 வயதுடைய மகேஸ்வரன் பிரசாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் தென் கொரிய அதிகாரிகளுடன் இணைந்து சியோலில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்னெடுத்து வருகிறது.