தலைப்புச் செய்திகள்

18 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன், 24 வயது நபர் கைது

வத்தளை – மாபொலப் பகுதியில் 18 கிலோகிராமிற்கும் அதிகமான ‘ஐஸ்’ (crystal methamphetamine) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 24 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) அதிகாரிகளால் இந்த நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 09 கிலோ 229 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், 09 கிலோ 264 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன. போதைப்பொருட்களை அளவிடப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் தராசு ஒன்றும், மொபைல் ஃபோன் ஒன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர் வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.