தலைப்புச் செய்திகள்

63 பிக்குகளைப் போன்றே, ஞானசார தேரரும் நடத்தப்படுவார்: அமைச்சர் நளிந்த தெரிவிப்பு

ஞானசார தேரருக்கு – பௌத்த பிக்குகளுக்கான ஆடை (சீவரம்) அகற்றப்பட்டு, அவருக்கு கைதிகளுக்கான ஆடைகள் அணிவிக்கப்படும் என்று, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளாாார்.

மேலும் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (06) நடைபெற்ற போது, அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

பல்வேறு குற்றங்களுக்காக தற்போது 63 பௌத்த பிக்குகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர்கள் அனைவருக்கும் இதே நடைமுறையே பின்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது. இதில் எந்த விசேட விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை.

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 63 பிக்குகள் விஷயத்தில் எந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறதோ, அதே முறையிலேயே ஞானசார தேரர் விஷயத்திலும் பின்பற்றப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற வேண்டாம் எனக் கோரி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு கோட்டே சங்க சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.