தலைப்புச் செய்திகள்

அட்டாளைச்சேனை மிஷாரியின் அமெரிக்க பயணம்; புலமைத் திருட்டுக்கு பின்னாலுள்ள பெரும் சதி: சக மாணவர்கள் குற்றச்சாட்டு

– றிசாத் ஏ காதர் –

ண்பார்வையற்றவர்கள் நாணயத் தாள்களை அடையாளம் காணும் கண்ணாடி ஒன்றினை கடந்த வருடம் அட்டாளைச்சேனைச் சேர்ந்த ஹம்தி ஹஸீன், அதாரி அஹமத், மிஷாரிப் அஹ்மத், ஆகிய மூன்று மாணவர்களின் முழு முயர்ச்சியின் மூலம் உருவாக்கியிருந்தனர்,

இந்த முயற்சியை தேசிய, சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான தேவையும், ஆர்வமும் இவர்களுக்கு இருந்தது. இது ‘குழுச் செயற்பாடு’ என்பதனால், குழுத் தலைவரின் தேவை முக்கியமானது. அதற்காக மிஷாரியை சக மாணவர்களான ஹம்தி, அதாரி ஆகியோர் குழுத் தலைவராக்கினர். அந்த பெருந்தன்மை அம்மாணவர்களின் அர்பணிப்பை இருட்டடிப்புச் செய்துள்ளதாக ஹம்தி, அதாரி ஆகியோர் உணர்கின்றனர்.

“எங்கள் விரல்களாலே எங்கள் ‘கண்களை’ குத்திக்கொண்டோமா என, அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

SLESA மற்றும் SLIIT பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ‘Future Founder-2025’ (Young Entrepreneurs BootCamp) அதாவது, ‘புத்தாக்குனர் மற்றும் இளம் தொழில் முனைவாளர்கள் போட்டி’ கடந்த வருடம் தேசிய ரீதியில் நடைபெற்றது.

இப்போட்டியில் 60ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும், சிறந்த 14 கண்டுபிடிப்புக்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இக் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியின் இறுதி நிகழ்வு 2025.07.19 அன்று SLIIT ( SRI LANKA INSTITUTE OF INFORMATION TECHNLOGY) பல்கலைக்கழகத்தில் பிரமாண்டமாக நடைபெற்று விருதுகளும் வழங்கப்பட்டன.

இப் போட்டியின் இறுதியில் அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தை பிரதிநிதிப்படுத்தி தரம் 11 ஐ சேர்ந்த முஹமட் மக்பூல் மிஷாரிப் அஹ்மத், பௌசுர் றஹ்மான் ஹம்தி ஹஸீன் மற்றும் அக்கரைப்பற்று முனவ்வரா கனிஷ்ட பாடசாலை மாணவன் முஹமட் அலி அதாரி அஹமத் ஆகியோர் குழுவாக இணைந்து கண்டுபிடித்த ‘Real Time Currency detecting spectacle for the blind persons’ (பார்வையற்றோருக்கான நிகழ்நேர நாணயம் கண்டறிதல் கண்ணாடி) என்ற சாதரனம், இறுதி போட்டியில் 02ம் இடத்தை (1st runner up) பெற்றது.

இதற்கு முன்னரும் இம்மாணவர்கள் தேசிய மட்டத்தில் புத்தாக்க போட்டிகளில் பங்குபற்றி பல வெற்றிகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

விடயம் இவ்வாறிருக்க, மூன்று பேர் குழுவாக தங்கள் அறிவு, அனுபவம், பணம் என்பவற்றை அர்ப்பணிப்புச் செய்து பெற்றுக்கொண்ட அங்கீகாரத்தை, தனிநபர் முயற்சிபோல், அந்தக் கண்டுபிடிப்பின் உரிமத்தை மிஷாரிப் அஹமத் எனும் மாணவன் கையகப்படுத்திக் கொண்டதாக, ஏனை மாணவர்கள் இருவரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இவ்வாறு மேற்படி கண்டுபிடிப்பை தன்னுடைய தனிப்பட்ட சொத்து போன்று கையகப்படுத்திக் கொண்ட மிஷாரிப் எனும் மாணவன், அந்தக் கண்டுபிடிப்பை தன்னுடையது எனக் காட்டி – சர்வதேச அளவில் இடம்பெறும் புத்தாக்க நிகழ்வுகளில், கலந்துகொள்ளச் செல்வது வருத்தமளிப்பதாக, ஏனைய இரு மாணவர்களும் கூறுகின்றனர்.

கடந்த வாரம் மிஷாரிப் அஹ்மத் அமெரிக்கா செல்வதாக சமூக வலைத்தளச் செய்திகள் ஊடாக அறிந்து கொண்டதாகவும், தங்களது முழு முயற்சியின் மூலமாக குழுவாக பெறப்பட்ட ஒரு விருதை தனக்கான விருதாக காண்பித்து, இவ்வாறு நடந்துகொள்வது முதிர்ச்சி மிக்க விடயமல்ல எனவும் அந்தக் குழுவின் ஏனைய மாணவர்கள் இருவரும் தெரிவிக்கின்றனர்.

இது விடயமாக அவர்கள் தொடர்ந்து கூறுகையில்; அதாரி அஹமத் (Adhary Ahamedh), ஹம்தி ஹசீன் (Hamthy Haseen) மற்றும் மிஷாரிஃப் அஹமத் (Misharif Ahamedh) ஆகிய மூவரும் இணைந்து, SLIIT பல்கலைக்கழக தேசிய மட்டப் போட்டியின் கீழ் – ஒரு குழு திட்டமாக (Team Project) ‘AI Smart Spectacle System’ என்ற கண்டுபிடிப்பை வெற்றிகரமாக உருவாக்கினோம் என்கின்றனர்.

இப்போட்டியில் தமது கூட்டு முயற்சியிலான இத்திட்டம் 2ஆம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்தது என்பதையும், இதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தும் தம்மிடம் உள்ளன எனவும் அவ்விரு மாணவர்களும் கூறுகின்றனர்.

”எனினும், குழு உறுப்பினர்களின் பங்களிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாமல், தற்போது பொதுவெளியில் – ஒரு தனிநபருக்குரியதாக அந்தக் கண்டுபிடிப்பு சித்தரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒரு குழுவின் கூட்டு முயற்சியை தனிநபரின் கண்டுபிடிப்பாகக் காட்டுவது நியாயமற்றதுடன், அறிவுசார் நேர்மைக்கும் புறம்பானதாகும். எந்தவொரு விருது விண்ணப்பம், கண்காட்சி, ஊடக வெளியீடு அல்லது உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவத்திலும் உண்மையான பங்களிப்பாளர்களும், திட்டத்தின் குழுச் சார்ந்த தன்மையும் துல்லியமாக வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் – இத்திட்டம் தொடர்பாக வெளியாகும் தனிநபர் உரிமை கோரல்களை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், அல்லது விளம்பரப்படுத்தும் முன்னதாக, அதன் உண்மையான திட்டப் பதிவுகள், விண்ணப்பங்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் விவரங்களைச் சரிபார்க்குமாறு, சம்பந்தப்பட்ட மாணவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

இக்கோரிக்கை எந்தவொரு தனிநபரையும் தனிப்பட்ட ரீதியில் குறிவைப்பதாகவோ அல்லது குறை கூறுவதற்காகவோ முன்வைக்கப்படவில்லை. மாறாக, அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதையும், கூட்டு முயற்சிகளின் வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்வதற்காகவே வெளியிடப்படுகிறது.