தலைப்புச் செய்திகள்

01 பில்லியன் அமெரிக்க டொலர் பரிமாற்றம் தொடர்பில் 04 வங்கிகளின் முகாமையாளர்கள் கைது

பெருந்தொகையான வெளிநாட்டு நாணயப் பணப் பரிமாற்றம் தொடர்பில், நான்கு தனியார் வங்கிகளைச் சேர்ந்த 04 முகாமையாளர்களை பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) கைது செய்துள்ளது.

இலங்கைக்குள் எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்யாமலேயே, கோட்டையில் செயல்படும் ஒரு பணப்பரிமாற்ற நிறுவனம் 01 பில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாட்டிற்குப் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் இந்தக் கைதுகள் தொடர்புடையவை என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.

பல வங்கி வழிமுறைகள் மூலம் இந்தப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் நம்புவதால், அதற்குரிய இறக்குமதிகள் ஏதுமின்றி இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு மாற்றப்பட்டது என்பதைக் கண்டறியும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மேற்படி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து நடத்தி வருகிறது.