
நான்கு வயது பெண் பிள்ளையை முச்சக்கர வண்டியில் வத்தேகமவுக்கு அழைத்துச் சென்று கைவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட – ஒரு பெண்ணும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களை ஹலி எல பொலிஸார் இன்று காலை (14) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் அக்குழந்தையின் தாய் என்றும், கைது செய்யப்பட்ட ஆண் முறையற்ற காதலர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேகத்திற்குரிய நபர்கள் வத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.



