தலைப்புச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் வரைவு சட்டமூலத்துக்கு, சட்டமா அதிபர் அனுமதி

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான வரைவு சட்டமூலத்துக்கு சட்ட மா அதிபர் – சட்ட அனுமதி வழங்கியுள்ளார்.

இதன் மூலம், இந்தச் சட்டம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வழிவகுத்துள்ளது.

வரைவு சட்டமூலத்தின் சட்ட ஆய்வு நிறைவடைந்து, தேவையான அங்கீகாரம், நீதி அமைச்சுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது

சட்டமா அதிபரின் னுமதியைத் தொடர்ந்து, அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்பு, நீதி அமைச்சு இந்த வரைவுச் சட்டத்தை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்துவதற்காக, நீதி அமைச்சு சமர்ப்பித்த ஒரு முன்மொழிவுக்கு அமைச்சரவை சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.