தலைப்புச் செய்திகள்

ரஹ்மத் மன்சூர் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மக்களுக்கு குழாய் கிணறுகள் அன்பளிப்பு

– ஏ.எஸ்.எம்.அர்ஹம் –

சாய்ந்தமருது பிரதேசங்களில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களுக்கு, முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூரின் ஏற்பாட்டில், குழாய்க்கிணறுகள் அமைத்து வழங்கப்பட்டுள்ளன.

சமீப காலமாக அதிகரித்துள்ள நீர்க்கட்டணங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக குடிநீர் வசதிக்காக பல சிரமங்களை எதிர்நோக்கிய குடும்பங்களை இனங்கண்டு இக்குழாய்நீர் கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

YWMA பேரவையின் அனுசரணையில், ரஹ்மத் மன்சூர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட இக்குழாய்க்கிணறுகள், பயனாளிகளின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளை இனங்கண்டு, எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது தொடர்ச்சியாக மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டு வரும் ரஹ்மத் மன்சூரின் இச்சேவையினை அப்பிரதேச மக்கள் பாராட்டியுள்ளனர்.

கிணறுகளை கையளிக்கும் நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசன் முக்கிய உறுப்பினர்கள், பயனாளிகள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.