
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து, மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் தப்பிச்சென்று.
இந்த சம்பவம் கட்டுநாயகவில் உள்ள தாவமொட்டாவவில், சற்று நேரத்திற்கு முன்பு – ஒரு பொலிஸ் சோதனைச் சாவடி அருகே நடந்துள்ளது.

அங்கு ஒரு நபர், பொலிஸ் உத்தியோகத்தர் மீது – துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (15) பிற்பகல் சுமார் 3.50 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
தகவல்களின்படி, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களின் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று, மோட்டார் சைக்கிளில் பயணித்த போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர், கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளை எடுக்கச் சென்றபோது, அந்த சந்தேக நபர் மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
பின்னர் அந்த சந்தேக நபர், துப்பாக்கியுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


