
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு ராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கோட்டை நீதவான் பாசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்த விசாரணைகள் தொடர்பாக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயும் சந்தேக நபராக இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு ராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


