தலைப்புச் செய்திகள்

நபரொருவரைக் கொலை செய்து, தலையை வெட்டிச் சென்றவர்கள், சிலையின் மீது கொழுவிச் சென்றனர்: அம்பலாந்தோட்டயில் சம்பவம்

நபரொருவர் தாக்கி கொலை செய்யப்பட்ட பின்னர், அவரின் தலை துண்டிக்கப்பட்டு மாமடல சந்தியிலுள்ள ஒரு சிலையில் தொங்கவிடப்பட்டதாக அம்பலாந்தோட்ட பொலிஸ் தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்டவரின் வீட்டு நேற்று இரவு தாமதமாக மூன்று நபர்கள் வந்து, கூர்மையான ஆயுதத்தால் அவரைத் தாக்கி, அவரது தலையைத் துண்டித்துக் கொண்டு சென்றதாக, உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மாமடல பகுதியில் நடந்த ‘ஒரு மும்மைக் மூன்று கொலைகள் தொடர்பாக இறந்தவர் முன்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் பிணையில் அவர் வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்கு முன்னால் ஒரு துப்பாக்கி கிடந்ததையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.

தாக்குதல் நடந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவரின் மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் மாமா ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.