தலைப்புச் செய்திகள்

அர்ச்சுனா எம்.பியை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை நாளை மறுநாள் (29) வரை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் ஒருவரை கைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அர்ச்சுனா எம்.பி – இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியிலுள்ள காணியொன்று தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையொன்றின் போது, பெண் ஒருவரை நோக்கி – நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைத்துப்பாக்கியை நீட்டி; “நாயே உன்னைச் சுடுவேன்” என்று கூறும் காட்சியை உள்ளடக்கிய வீடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் பரவியமை குறிப்பிடத்தக்கது.